முல்லைத்தீவு நித்தகை குளம் உடைப்பெடுப்பு | தினகரன்

முல்லைத்தீவு நித்தகை குளம் உடைப்பெடுப்பு

இரு குடும்பங்களில் ஆறு பேரை மீட்க விமானப்படையின் உதவி கோரல்

முல்லைத்தீவு நித்தகைகுளம் உடைப்பெடுத்துள்ளதன் காரணமாக குளத்தின் பிற்பகுதியில் சிக்குண்டுள்ள இரு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேரினை மீட்பதற்கு விமானப்படையின் உதவியினைக் கோரியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் சின்னத்தம்பி லிங்கேஸ்வரகுமார் தெரிவித்துள்ளார்.

குளத்தின் நீர் உடைப்பெடுத்ததன் காரணமாக பெருமளவு நீர் வெளியேறிக் கொண்டிருக்கின்றது.

குளத்தின் மேற்குப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் பாதுகாப்பான நிலையில் உள்ள போதிலும் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வருவதற்கு விமானப் படையினரின் உதவியினைக் கோரியுள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.

இதேவேளை உடைப்பெடுத்த நித்தகைக்குளத்தின் அணைக்கட்டினை பைகளில் மண் நிரப்பி பாதுகாக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு குறுாப் நிருபர்


Add new comment

Or log in with...