ஆளும் தரப்பு பிரதம கொரடாவாக எஸ். பி. திசாநாயக்க | தினகரன்

ஆளும் தரப்பு பிரதம கொரடாவாக எஸ். பி. திசாநாயக்க

ஆளும் தரப்பு பிரதம கொரடாவாக பெருந்தெருக்கள் மற்றும் பாதைகள் அபிவிருத்தி அமைச்சர் எஸ். பீ. திஸாநாயக்க இன்று (09) முற்பகல் தனது கடமைகளை பாராளுமன்ற கட்டடத்தில் வைத்து பொறுப்பேற்றார்.

நேற்றைய தினம் (08) ஆளும் தரப்பு பிரதம கொரடாவாக நியமிக்கப்பட்ட எஸ்.பி. திஸாநாயக்க, அது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1989ம் ஆண்டு நுவரெலிய ஹங்குராங்கெத்த தொகுதியை பிரதிநிதித்துவம் செய்து பாராளுமன்றத்துக்கு வந்த அவர், 1994ம் ஆண்டு பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் அரசில் நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு அமைச்சராகவும் அதன்பின்னர் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் சமுர்த்தி, இளைஞர் விவகார நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். நான்கு தசாப்த காலமாக அரசியலில் ஈடுபட்டுள்ள அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், உப தலைவர், பொருளாளர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.


Add new comment

Or log in with...