பாராளுமன்றத்தை கூட்டுமாறு வெளிநாடுகளால் கோரிக்ைக விடுக்க முடியாது | தினகரன்

பாராளுமன்றத்தை கூட்டுமாறு வெளிநாடுகளால் கோரிக்ைக விடுக்க முடியாது

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு கூறுவதற்கு வெளிநாடுகளுக்கு உரிமை இல்லையென வெளிநாட்டு ஊடக விமர்சகர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வெளிநாடோ, நிறுவனமோ, சட்ட வழங்குனர்களோ பாராளுமன்றத்தை கூட்டுமாறு இலங்கைக்கு கூறுவார்களேயானால், அவர்கள் இலங்கையின் தேசிய நீதித்துறையின் அதிகார எல்லைக்குள் நடைபெறும் விடயங்கள் தொடர்பாக தலையிடுவதாகக் கொள்ள முடியும். அதேநேரம், ஐக்கிய நாடுகள் கொள்கைகளுக்கு முரணாக செயற்படுகிறார்கள் என்பதும் புலனாகின்றது.

கூடிய விரைவில் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் ஜெனரல் பற்றீரிஸியா ஸ்கொட்லன்ட் மற்றும் ஐக்கிய இராச்சிய இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் நயர்ட் ஹீதர் போன்றோரும் சில தூதரகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக கருத்துக்களை வினவிய போதே மொஹான் சமரநாயக்க இவ்வாறு கூறினார்.

கலாசார மற்றும் பொருளாதார அதிகாரத்தினூடாக பலவந்தமாக பலவீனமான நாடுகளை அவர்களின் ஆணைக்கு அடிபணிய செய்ய அவர்களின் மேலதிக பலத்தை பாவிப்பது அதிகார பலத்தின் தன்மை எனத் தெரிவித்தார்.

நாடுகளின் மீது தமது அதிகாரத்தை செலுத்தி, அந்த ஏகாதிபத்திய அமைப்புகளின் தலைவர்களும் தலைவிகளும் முன்வைத்துள்ள கருத்துகளில் இதுவரை சரியான கருத்து ஐக்கிய இராச்சிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மைக்கல் மொரிஸ் நெஸ்பி பிரபு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையேயென மொஹான் சமரநாயக்க சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...