வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 இலட்சத்து 73 ,595 பேர் விண்ணப்பம் | தினகரன்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 இலட்சத்து 73 ,595 பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் 13 இலட் சத்து 73 ஆயிரத்து 595 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து கள ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் கடந்த செப். 1-ம் திகதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் தொடங்கின. அன்றே வரைவு வாக்காளர் பட்டி யல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலின்படி 5 கோடியே 82 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தமிழகத்தில் இருந்தனர்.

செப். 1-ம் திகதி முதல் ஒக். 31-ம் திகதி வரை 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் திகதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை புதிய வாக்காளர்கள் சேர்க்கலாம். இறந்தவர்கள் பெயர்களை நீக்கலாம். முகவரி மாறியவர்கள், தொகுதி மாறியவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளித்து திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதுதவிர செப். 9 மற்றும் 23 ஒக்டோபரில் 7 மற்றும் 14 ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 67,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்களும் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட் டது. இந்த முகாம்களில் இலட்சக் கணக்கானவர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு மனு அளித்தனர்.

மற்ற நாட்களில் தாலுகா, மண் டல அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் அளித்தனர். இவை தவிர ஒன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்தனர்.


Add new comment

Or log in with...