தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவுடன் இன்று சந்திப்பு | தினகரன்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவுடன் இன்று சந்திப்பு

பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து பேசவுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு ள்ளார்.

அவரை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க உள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:-

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை இன்று கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் சந்திக்க இருக்கிறோம். அவரை சந்திக்க 6 பேர் மட்டுமே அனுமதிக்க சிறை விதி உள்ளதால் 4 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அவரை சந்திக்க முடியும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று பெங்களூர் செல்கிறோம். நானும் அங்கு செல்கிறேன். அவரை சந்தித்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எங்கள் துணை பொதுச்செயலாளர் அறிவிப்பார்.


Add new comment

Or log in with...