ஊழியர்களுக்கு சிறுநீர் குடிக்க வைத்த முகாமையாளர் கைது | தினகரன்

ஊழியர்களுக்கு சிறுநீர் குடிக்க வைத்த முகாமையாளர் கைது

விற்பனை இலக்கை எட்டத் தவறும் ஊழியர்களுக்கு சிறுநீரை குடிக்க வைத்த மற்றும் கரப்பான் பூச்சிகளை சாப்பிடச் செய்த சீன நிறுவனம் ஒன்றின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊழியர்கள் இடுப்புப் பட்டியால் அடிக்கப்படுவது மற்றும் மஞ்சள் நிற திரவத்தை குடிக்கும் வீடியோ ஒன்று வெளியானதை அடுத்தே பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விற்பனை இலக்கை எட்டாதவர்களுக்கு கரப்பான் பூச்சியை சாப்பிடத் தருவதாகவும் சமூகதளத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தை அடுத்து மூன்று முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீன சமூக ஊடகமான வெய்போவில் பரவிய வீடியோவில் வட்டமாக நிற்பவர்களுக்கு நடுவில் நிற்கும் ஆண் ஊழியர் ஒருவர் இடுப்புப் பட்டியால் தாக்கப்படுவது பதிவாகியுள்ளது. அவர் மூக்கை அடைத்தபடி மஞ்சள் நிற திரவம் ஒன்றையும் அருந்துகிறார்.

குறித்த நிறுவனம் தமது ஊழியர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்றும் இது பற்றி வெளியே கூறினால் சம்பளத்தை இழந்து விடுவோம் என்று அவர்கள் பயந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...