ஈராக்கில் ஐ.எஸ் குழுவின் 200 மனித புதைகுழிகள் | தினகரன்

ஈராக்கில் ஐ.எஸ் குழுவின் 200 மனித புதைகுழிகள்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துகொள்ளும் குழுவினர் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த ஈராக் பகுதிகளில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான உடல்கள் உள்ளதை ஐ.நாவின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

நினிவே, கிர்குக், சலாவுத்தீன் மற்றும் அன்பார் போன்ற மேற்கு பகுதி ஆளுநரகங்களில் இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

12 ஆயிரம் பேர் இந்த மனித புதைக்குழிகளில் இருக்கலாம் என்று ஐ.நா அறிக்கை குறிப்பிடுகின்றது. 2014ஆம் ஆண்டு ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ், அந்த குழு விரும்பாத அனைவரையும் கொன்று குவித்தது.

இந்த மனிதப் புதைகுழிகளில் பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள், விசேட தேவையுடையவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் ஈராக் பாதுகாப்பு படை உறுப்பினர்களின் உடல்களும் இருப்பதாக விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையின் வான் தாக்குதலின் உதவியோடு ஐ.எஸ் குழு ஈராக் படையினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தற்போது சிறு பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.


Add new comment

Or log in with...