நடுவர்களுக்கான உத்தியோக இலச்சினை வழங்கும் நிகழ்வு | தினகரன்

நடுவர்களுக்கான உத்தியோக இலச்சினை வழங்கும் நிகழ்வு

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடுவர்களுக்கான உத்தியோக இலச்சினை வழங்கும் நிகழ்வொன்று (05) மூதூர் பிரதேச சபை கட்டடத்தில் இடம் பெற்றது .மூதூர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.இர்பான் இதற்கு தலைமை வைத்தார்.

2012ஆண்டு தொடக்கம் 2018 வரையான காலப்பகுதியில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நடுவர்களுக்கான பரீட்சை மற்றும் செயல்முறை பரீட்சையில் சித்தி பெற்ற நடுவர்களுக்கான பாராட்டும் இலச்சினை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் தலைவர் எதிர்காலத்தில் மூதூர் நடுவர்கள் தேசிய ரீதியிலும் உலகளாவியரிதியிலும் பங்கு பற்றும் அளவுக்கு ஊக்கப்படுத்தி ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தார் மூதூர் உதைபந்தாட்ட லீக் ஊடாக பிரிவினர் இதனைத் தெரிவித்தனர்.

 திருமலை மாவட்ட விசேட , மூதூர் தினகரன் நிருபர்கள்.


Add new comment

Or log in with...