மக்கள் பெருக்கத்துக்ேகற்ப நவீனமடையும் நகரங்கள் | தினகரன்


மக்கள் பெருக்கத்துக்ேகற்ப நவீனமடையும் நகரங்கள்

நாட்டு மக்களில் அநேகமானோர் நகரங்களிலேயே வசிக்கின்றனர். எங்கள் வாழ்க்கையில் நகரம் எந்த அளவுக்கான விசேட இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதைக் காட்ட ஐக்கிய நாடுகள் சபை ஒக்டோபர் 31 ஆம் திகதியை உலக நகரங்கள் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக நகரங்கள் தினத்துக்கான பொதுவான தொனிப்பொருள் ‘சிறந்த நகரம் சிறந்த வாழ்க்கை’ என்பதாகும். அதே நேரம் ஒவ்வொரு வருடமும் ஒரு உப தொனிப்பொருள் சேர்க்கப்படுகின்றது. இந்த வகையில் இந்த வருடத்துக்கான உப தொனிப்பொருள் நிலைபேறான மீள்நன்மையுடன் கூடிய நகரங்களை அமைப்போம் என்பதாக இருந்தது.

ஒவ்வொரு வாரமும் உலகளாவிய ரீதியில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் நகரங்களுக்குள் உட்புகுவதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது வேலைகளின் நிமித்தம் வேலை நாட்களில் நகரங்களுக்கு வருவோரின் எண்ணிக்கைக்குப் புறம்பானதாகும். இவ்வாறான அதிக அளவிலான நகர மயமாக்கம் இடர்களை அதிகரிக்கிறது. எனினும் நெருக்கடிகள் ஆபத்தாக அல்லது இடர்களாக மாறிவிடாத வகையில் நகரங்கள் புயல், வெள்ளம் பூமியதிர்ச்சி, தீ மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் வகையில் மீள் நன்மையுடன் கூடிய நகரங்களே அமைக்கப்பட வேண்டும்.

நகரங்களை திட்டமிடுதல்:

மீள்நன்மையுடன் கூடிய நரகங்களை அமைக்கும் பணிகள் உலகளாவிய ரீதியில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிகரிக்கக் கூடிய வெள்ள அபாயத்தைத் தடுக்க சில நாடுகள் உரிய நடவடிக்ைககளை மேற்கொண்டுள்ளன. அதேநேரம் வரட்சி காலத்தில் நீரைச் சேமித்து வைக்கக் கூடிய வசதிகளை உள்ளடக்கிய நீருக்கடியிலான நீர் சேகரிக்கும் வசதிகளைக் கொண்ட தாங்கிகள் ஏற்கனவே பாங்கொக்கில் அமைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் ஜொகானஸ்பேர்க் நகரில் பொழுதுபோக்கு விளையாட்டு மற்றும் சமூக நிகழ்ச்சிகளை நடத்த நகரத்தின் நடுவில் பெருமளவு வெற்றிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கொழும்பில் வெள்ளத்தைக் குறைக்கும் நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெரும்பாலான நாடுகளில் அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் நகரங்களிலும் திட்டமிடப்பட்ட குடியேற்றங்களிலுமே வசிக்கின்றனர். 2050 ஆம் ஆண்டளவில் இது மூன்றில் இரண்டு பங்காக மாறக் கூடும். அத்துடன் இப்போது 7 பில்லியனாக உள்ள உலக மக்கள் தொகை அப்போது 9 பில்லியனை எட்டியிருக்கும்.

நகர்ப்புறம் என்பது அதிகரித்த சக்தி, புத்தாக்கம் மற்றும் பொருளாதார சுறுசுறுப்புக்கு அடையாளமாகியுள்ளதை மறுப்பதற்கில்லை. இந்த அம்சங்களையும் எதிர்காலத்தில் மீள்தன்மை என்பதையும் கருத்திற் கொண்டே நகரங்களை திட்டமிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கான கடவுச் சொல்லாக மாறியிருப்பது 'ஸ்மார்ட் நகரங்கள்' என்ற பதமாகும். எதிர்கால நகரங்கள் இனி ஸ்மார்ட் நகரங்களாகத்தான் அமையும். இந்த நகரங்களில் அனைத்தும் இணையத்தின் வழியே தொடர்புபட்டிருக்கும்.

எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நகரமும் எதிர்வரும் 20 வருட காலத்தில் 41 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடும் என்று அமெரிக்க சஞ்சிகையொன்று கூறுகிறது.

மேலே குறிப்பிட்ட ஸ்மார்ட் நகரங்களில் போக்குவரத்துப் பிரச்சினை இருக்காது. ஏனெனில் அங்கு ஓடும் வாகனங்களில் சாரதிகள் இருக்க மாட்டார்கள். அந்த வாகனங்கள் ஒன்றுக்கொன்று சமிக்ஞைகளை பரிமாறிக் கொள்வதுடன் வீதி சமிக்ஞைகளையும் ஒழுங்காக பின்பற்றும். அதேபோல நகரங்களும் ஒன்றுக்கொன்று இணையத்தால் தொடர்புபட்டிருக்கும் காப்புறுதி மற்றும் சுகாதார செலவுகள் பெருமளவு குறைந்திருக்கும்.

ஸ்மார்ட் நகரத்து மக்களுக்கு சொந்தமாக கார் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் எந்த நேரமும் சாரதியில்லாத வாகனமொன்றை அவர்கள் வரவழைத்துக் கொள்ளலாம்.

எரிசக்தி பெரும்பாலும் புதுப்பிக்கத்தக்க சக்தியாகத்தான் இருக்கும். அனைத்து கழிவுப்பொருட்களும் சூரிய சக்தியுடன் கூடிய கழிவு நிலையங்கள் மூலம் மீள சுத்திகரிக்கப்படும். பெரும்பாலானோர் தமது வீடுகளில் இருந்தே வேலைகளைச் செய்வார்கள். அவர்களது வேலைகள் அனைத்தும் இணையத்தின் மூலம் நடைபெறும். எனவே வீடுகளை விட்டு வெளியே செல்லும் போக்குவரத்து சேவையும், செலவும் மிச்சமாகும்.

இவை அனைத்தையும் செயற்படுத்த பொதுத்துறை மட்டும் போதாது என்பதால் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு அதிக அளவில் இடம்பெறும்.

கொழும்பு நகரம் துரித கதியில் மாறி வருகிறது. இன்னும் நான்கு அல்லது ஐந்து வருடங்களில் அது பாரிய அளவில் மாறியிருக்கும். அதிக அளவிலான உயர் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. போக்குவரத்து வசதிகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன. கொழும்பில் சனத்தொகை ஏற்கனவே 10 இலட்சத்தை எட்டியுள்ளது. அங்கு நிரந்தரமாக இருப்பவர்களினதும் வேலைக்கு வருபவர்களினதும் எண்ணிக்கை இனிமேல் அதிகரிக்கும்.

நாட்டின் பொருளாதார மையமாக இப்போது கொழும்பு நகரம் இருந்து வருகிறது. ஆனால் நகரை விஸ்தரிக்கும் செயற்பாடுகள் இப்போது முன்னரைவிட துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. இந்த ரீதியில் கொழும்பு மட்டுமன்றி கண்டி, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய நகரங்களும் துரிதகதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

நகரங்கள் இப்போது பாதுகாப்பாக, எளிதில் அணுகக் கூடிய, செலவுகளை தாங்கக் கூடிய வகையில், மீள்நன்மையுடனும் நிலைபேறானதாகவும் அமைக்கப்பட வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்தப்படுகிறது. அது மட்டுமன்றி குற்றச் செயல்கள், போதைவஸ்து, மாசடைதல் மற்றும் வறுமை ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் புதிய நகரங்கள் அமைய வேண்டும்.

ஆசியாவில் பல நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வந்த போதிலும் நல்ல வாழ்க்கை தரத்துடன் கூடிய மூன்று நகரங்கள், குறிப்பாக சிங்கப்பூர், டோக்கியோ, சோபே மட்டுமே சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் கூடிய 50 நகரங்களின் பட்டியலில இடம்பிடித்துள்ளன.

இந்த 50 நகரங்களையடுத்து ஒரு சில ஆசிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

நகரங்களின் வசதிகளை அதிகரிக்கக் கூடிய செயற்பாடுகள் ஆசிய நாடுகள் துரிதகதியில் முன்னெடுக்க தவறுமேயானால் எமது அடுத்த பரம்பரையின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கப் போவதில்லை. எமது நகரங்களை திட்டமிடுவோர் இதனை மனதில் வைத்து செயற்பட வேண்டிய அவசியமும் அவசரமும் இப்போது எழுந்துள்ளன.


Add new comment

Or log in with...