சீரற்ற காலநிலை; மாணவர்களின் கற்றல் பாதிப்பு | தினகரன்


சீரற்ற காலநிலை; மாணவர்களின் கற்றல் பாதிப்பு

சீரற்ற காலநிலை; மாணவர்களின் கற்றல் பாதிப்பு-School Flood-Kinniya Muslim Ladies-Trincomalee

கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றார்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடும் அடை மழை காரணமாக பாடசாலை காணி மற்றும் வகுப்பறைகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளதால் தளபாடங்கள் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை; மாணவர்களின் கற்றல் பாதிப்பு-School Flood-Kinniya Muslim Ladies-Trincomalee

சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதுடன் மாணவர்களின் வரவு வீழ்ச்சியும் இன்றைய தினம் (08) குறைவடைந்துள்ளதாக பாடசாலை தகவல்கள்  தெரிவிக்கின்றன.

வெள்ள நீர் வகுப்பறைக்குள் உட்புகுந்ததால் மாணவர்கள் வகுப்பறையை விட்டும் வெளியேறியுள்ளனர்.

கற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் எவ்வித சிரமம் ஏற்படாத வண்ணம் வெள்ள நீரில் இருந்து பாதுகாக்குமாறு பெற்றார்கள் உரிய கல்வி உயரதிகாரிகள், இது தொடர்பான சம்மந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுக்கின்றனர்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)


Add new comment

Or log in with...