ஜனாதிபதி, பிரதமருக்கு ஆதரவு | தினகரன்

ஜனாதிபதி, பிரதமருக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கப் போவதாக நேற்று விடுத்துள்ள அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொய்ப் பிரசாரங்களில் தன்னைப் பற்றி தவறான வகையில் கூறப்படுவதாகவும் அதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் உள்ள தனது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட முக்கிய விஜயம் ஒன்றின் பேரில் தான் வெளிநாடு சென்றிருந்ததாகவும் அந்த நிலையில் தன்னைப் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் சில இணையத்தளங்கள் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளதையிட்டு தான் பலத்த கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

எனது அரசியல் வாழ்க்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தவும் அதன் அங்கத்துவத்தை அதிகரிக்கவுமே அர்ப்பணித்துள்ளேன். சுதந்திரக் கட்சியுடன் இணைந்து மக்களின் நன்மைக்காக பாடுபடுவதில் நான் திடமாக இருக்கிறேன். எனவே நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் நாட்டின் எதிர்கால நன்மைக்காக நேர்மையாக செயற்படுவேன். அதேபோல் இந்த இரு தலைவர்களுக்கும் அனைத்து பேதங்களையும் மறந்து அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...