ப.சிதம்பரம் தீபாவளி வாழ்த்து: கிண்டல் செய்த எச். ராஜா | தினகரன்

ப.சிதம்பரம் தீபாவளி வாழ்த்து: கிண்டல் செய்த எச். ராஜா

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தீபாவளி தினத்தன்று கூறிய வாழ்த்தை விமர்சித்து பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா விமர்சித்துள்ளார்

தீபாவளியை முன்னிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ”தீய சக்தியை, நல்ல சக்தி அளித்ததற்காக கொண்டாடப்படுகிறது. ஆனால் தற்போதுள்ள நவீன சாத்தான்களாக வெறுப்பு, சகிப்பின்மை ஆகியவை உள்ளன. வரும் புதிய வருடத்தை அன்பு, சகிப்புத்தன்மை மற்றும் அரசியலமைப்புக்கான மதிப்புகள் ஆகியவற்றுக்கான வெற்றியாக்குவோம்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த வாழ்த்தைக் குறிப்பிட்டு பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா, ”நவீன காலத்தின் சாத்தான் ஊழல். முன்கூட்டியே பிணை வாங்குவதற்காக ஓடியவர்களுக்கு இது நினைவிருக்காது” என்று ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.


Add new comment

Or log in with...