சீன எல்லையில் இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி | தினகரன்

சீன எல்லையில் இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலுள்ள இராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்

2014ம் ஆண்டு சியாச்சினில் உள்ள இராணுவ முகாமுக்கு வருகை தந்த மோடி, உலகின் மிக உயரமான போர்ப் பகுதியில் உள்ள எராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். 2015ம் ஆண்டு அமிர்தசரஸில் உள்ள காஸாவில் டோக்ராய் போர் நினைவிடத்தில் வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.

2016 ம் ஆண்டு இமாச்சலில் இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். 2017 ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் உள்ள பிஎஸ்எப் படை வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடினார். இந்த ஆண்டு தீபாவளியை எல்லையில் உள்ள வீரர்களுடன் கொண்டாடப் போவதாக தெரிவித்தார்.அதன்படி நேற்று உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சில் எல்லைப் பகுதியில் உள்ள இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். இராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மோடி, அவர்களின் பணியை வெகுவாகப் பாராட்டினார்.

முன்னதாக கேதார்நாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு மதியம் கேதார்நாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் வட இந்தியாவில் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது


Add new comment

Or log in with...