ரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது | தினகரன்

ரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது

ரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது-Suspect with Rs.2 Crore Worth Heroin Arrested at Negombo

நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (06) பிற்பகல் 6.15 மணியளவில், கொச்சிக்கடை, தக்கியா வீதியின் ஜய மாவத்தைக்கு திரும்பும் சந்திக்கு அருகில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரிவு நச்சு போதைப் பொருள் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த வீதியால் பயணித்த சந்தேகநபரை பரிசோதித்த போது, அவரது பயணப் பொதியில் 2.06 கிலோ கிராம் (2kg 60g) போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர், நீர்கொழும்பு, கடொல்கெலே  பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,  அவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தேகநபரை இன்றைய தினம் (07)  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னிலைப்படுத்த நடவடிக் எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 


Add new comment

Or log in with...