தேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE) | தினகரன்


தேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)

தாக்குதல் சம்பம்; தேவரப்பெரும, ஹேஷா விதானகே கைது-Palitha Thewarapperuma-Hesha Withanage Arrested

தாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன  மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தேவரப்பெரும மற்றும் ஹேஷா விதானகே ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (05)  கொழும்பு கொள்ளுப்பிட்டி கொள்ளுப்பிட்டியில் கொள்ளுப்பிட்டி பொலிஸில் சரணடைந்த அவர்கள்,  கைது செய்யப்பட்டு, கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து,  அவர்கள் இருவரையும், தலா ரூபா ஒரு இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் முதலாம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் வைத்து, இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில், ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன காயமடைந்த நிலையில், இது தொடர்பில் முறைப்பாடொன்றையும் மேற்கொண்டிருந்தார்.


தாக்குதல் சம்பம்; தேவரப்பெரும, ஹேஷா விதானகே கைது 12.18pm

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தேவரப்பெரும, ஹேஷா விதானகே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற மேஜரும்,  சட்டத்தரணியுமான அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் அவர்கள் கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிசில் சரணடைந்ததை அடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...