3rd T20: PAKvNZ; நியூசிலாந்தையும் பாகிஸ்தான் வெள்ளையடிப்பு | தினகரன்

3rd T20: PAKvNZ; நியூசிலாந்தையும் பாகிஸ்தான் வெள்ளையடிப்பு

3rd T20: PAKvNZ; நியூசிலாந்தையும் பாகிஸ்தான் வெள்ளையடிப்பு-3rd T20-PAKvNZ Pakistan Won by 47 Run and Whitewashed

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான T20 போட்டியில் பாகிஸ்தான் அணி 47 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

டுபாய் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நேற்று (04) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட் இழப்பிற்கு 167 ஓட்டங்களைப் பெற்றது. அபாரமாக ஆடிய பாபர் அசாம் 79 ஓட்டங்களையும் ஹபீஸ் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்து வீச்சில் கொலின் டி க்ரேன்ட்ஹொம் 2 விக்கெட்டுகளையும் லோக்கி பேர்குசன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 16.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. அணித்தலைவர் பேன் வில்லியம்சன் அபாரமாக ஆடி 38 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் மறுமுனையில் விக்கட்டுக்கள் இழக்கப்படவே நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. 

பாகிஸ்தான் அணி சார்பில் சாதாப் கான் 3 விக்கெட்டுக்களையும் இமாட் வசீம் மற்றும் வக்காஸ் மக்‌ஷூத் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதோடு பாஹிம் அஷ்ரப் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். 

போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாபர் அசாம் தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் சிறப்பாட்டக்காரராக ஹபீஸ் தெரிவு செய்யப்பட்டார்.  

பாகிஸ்தான் அணி, இறுதியாக பங்குபற்றிய 33 T20 போட்டிகளில் 29 போட்டிகளை வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் 167/3 (20)
பாபர் அசாம் 79 (58)
ஹபீஸ் 53 (34)
சொய்ப் மலிக் 19 (9)

கொலின் டி க்ரேன்ட்ஹொம் 2/41 (4)
லோக்கி பேர்குசன் 1/29 (4)

நியூசிலாந்து 119/10 (16.5)
கேன் வில்லியம்சன் 60 (38)
க்ளென் பிலிப்ஸ் 26 (24)

சாதாப் கான் 3/30 (4)
இமாட் வசீம் 2/28 (4)
வக்காஸ் மக்சூத் 2/21 (1.5)
பாஹிம் அஷ்ரப் 1/6 (2)


Add new comment

Or log in with...