கொட்டகல கஹட்ட போட்டி வெற்றிகரமாக நிறைவு | தினகரன்

கொட்டகல கஹட்ட போட்டி வெற்றிகரமாக நிறைவு

கொட்டகல கஹட்ட போட்டி வெற்றிகரமாக நிறைவு-Kotagala Kahata Competition

கொட்டகல கஹட்ட ரச வாசனா வாடிக்கையாளர் ஊக்குவிப்புப் போட்டி, ஜுன் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 2018 ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை இடம்பெற்றது. அது, அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. கிரான்ட் ஒறியன்டல் ஹொட்டேலில் நவம்பர் 02 ஆம் திகதி இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது 20 ஸ்கூட்டி பெப்கள் பரிசாக வழங்கப்பட்டன.

வாடிக்கையாளர்கள் இந்தப் போட்டிக்குத் தகுதி பெற, தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பனவற்றைக் குறிப்பிட்டு, கொட்டகல கஹட்ட - ரச வாசனா, த.பெ. இல. 161, கொழும்பு என்ற முகவரிக்கு கொட்டகல கஹட்ட மேலுறைகளை அனுப்பி வைக்க வேண்டும்.

கொட்டகல கஹட்ட போட்டி வெற்றிகரமாக நிறைவு-Kotagala Kahata Competition

வாடிக்கையாளர்களின் நன்மை கருதியும், அதிகளவானவர்கள் பங்கேற்கும் விதத்திலும் கொட்டகல கஹட்ட ஊக்குவிப்புப் பிரிவினர் 112 நகரங்களில் 20 மாவட்டங்களை உள்ளடக்கியவாறு உலா வந்துள்ளனர்.

கொட்டகல கஹட்ட வாடிக்கையாளர் ஊக்குவிப்புத் திட்டம் பற்றிக் கருத்துத் தெரிவித்த நிறுவனத்தின் பேச்சாளர், 'நாம் போட்டியை நடத்திய மூன்றாவது முறை இதுவாகும். கடந்த இரண்டு வருடங்களாக இது, மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களிலும் எமக்குக் கிடைத்த வரவேற்பைக் கருத்திற் கொண்டு, அதே வகையான ஒரு போட்டியை நாம் இந்த வருடத்திலும் ஏற்பாடு செய்திருந்தோம்.

கொட்டகல கஹட்ட போட்டி வெற்றிகரமாக நிறைவு-Kotagala Kahata Competition

இந்தப் போட்டியை ஏற்பாடு செய்வதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பெறுமதியைப் பெற்றுக்கொடுப்பதும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுமே எமது நோக்கமாகும். இவ்வருடமும் போட்டிக்கு அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. அதன் மூலம் எமது உற்பத்திகளுக்கு காணப்படும் வரவேற்பு நன்கு புலப்படுகிறது. எமது உயர் தரமே இதற்குப் பிரதான காரணமாக அமைந்திருக்கிறது என்று நாம் முழுமையாக நம்பிக்கை தெரிவிக்கின்றோம்” என்று தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், “கொட்டகல கஹட்டவின் பயணம் 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. எமது வர்த்தகப் பெயரான கொட்டகல கஹட்ட, இப்போது இலங்கையில் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். மிகக் குறுகிய 6 வருட காலத்தில் இலங்கையின் முன்னணி தேயிலை வகைகளில் ஒன்றாக நாம் இடம்பெற்றுள்ளோம்” என்றும் கூறினார்.

CW மெக்கி பிஎல்சி நிறுவனத்தின் FMCG பிரிவான ஸ்கான் உற்பத்திகள் பிரிவின் மிகச் சிறந்த உற்பத்திகளில் ஒன்றாக கொட்டகல கஹட்ட திகழ்ந்து வருகிறது. இலங்கையின் மிகச் சிறந்த உயர்தர தேயிலை, அதன் சுவை, நறுமணம் ஆகிய அனைத்தையும் கொண்டு தயாரிக்கப்படும் இந்த தேயிலை, C W மெக்கி பிஎல்சி குழுமத்தின் ஸ்கான் உற்பத்திகள் பிரிவின் ஒரு தயாரிப்பாகும். C W மெக்கி பிஎல்சி, இலங்கையின் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒரு குழும நிறுவனமாகும். உற்பத்திகள், இறக்குமதிகள், விநியோகம் என்பனவற்றை FMCG பொருட்கள் துறையில் இது மேற்கொண்டு வருகிறது.

சன்குயிக் பழச்சாறு வகைகள், ஸ்கான் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர். ஸ்கான் ஜம்போ பீனட்ஸ், ஓஷன் பிரஷ் டூனா, டெலிஷ் பேக்கரி உற்பத்திகள், பொரஸ்ட் பாம் டின்களில் அடைக்கப்பட்ட மரக்கறி வகைகள், என்-ஜோன் சமையல் எண்ணெய் ஆகியன நிறுவனத்தின் சில உற்பத்திகளாகும். இவை அனைத்தும் தத்தமது பிரிவுகளில் சந்தையில் முன்னணியில் உள்ளன. CW மெக்கி, ஸ்கான் புரடக்ஸ், பல்வேறு வர்த்தகப் பெயர்கள், பல்வேறு வர்த்;தக முறைகளைக் கொண்ட இலங்கையின் சகல சந்தை நிலைகளிலும் செயற்படக் கூடிய வலுவான வர்த்தக நாமம் ஒன்றைக் கொண்ட ஒரு நிறுவனமாகும்.

 


Add new comment

Or log in with...