4th ODI: INDvWI; நான்காவது போட்டி இந்திய அணி வசம் | தினகரன்

4th ODI: INDvWI; நான்காவது போட்டி இந்திய அணி வசம்

4th ODI: INDvWI; நான்காவது போட்டி இந்திய அணி வசம்-4th ODI INDvWI-India won by 224 runs

சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ஓட்டங்களைக் குவித்தது.

அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா 162 ஓட்டங்களையும் அம்பதி ராயுடு 100 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் கெமர் ரோச் 2 விக்கெட்டுக்களையும் அஸ்லி நேர்ஸ் மற்றும் கீமோ போல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 36.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தளுவியது.

அவ்வணி சார்பாக அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர்  ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் ஏனைய அனைவரும் 20 இற்கும் குறைவான ஓட்ட எண்ணிக்கையுடன் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணியின் கலீல் அஹமட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் புவனேஸ்வர் குமார் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டார். நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் இந்திய அணி 2-1 எனும் அடிப்படையில் முன்னிலையில் உள்ளதுடன் இறுதிப்போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை திருவனானந்தபுரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா 377/5 (50)
ரோஹித் சர்மா 162 (137)
அம்பதி ராயுடு 100 (81)

கெமர் ரோச் 2/74 (10)
அஸ்லி நேர்ஸ்  1/57 (8)
கீமோ போல்  1/88 (10)

மேற்கிந்திய தீவுகள் 153/10 (36.1)
ஜேசன் ஹோல்டர்  54* (70)

கலீல் அஹமட் 3/13 (5)
குல்தீப் யாதவ்  3/42 (8.2)
புவனேஸ்வ குமார்  1/30 (5)
ஜடேஜா  1/39 (10)


Add new comment

Or log in with...