Saturday, April 20, 2024
Home » டெங்கு ஒழிப்பு ஏற்பாடுகளில் அரசாங்கம் அதிக அக்கறை

டெங்கு ஒழிப்பு ஏற்பாடுகளில் அரசாங்கம் அதிக அக்கறை

by gayan
December 6, 2023 7:11 am 0 comment

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மூன்றாண்டுக ளுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 1020 ஆக,அதிகரித்துள்ளது.

டெங்கு தொற்றாளர்களில் 47 வீதத்தினர் மேல்மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். இங்கு, 36,266 பேருக்கு டெங்கு தொற்றியுள்ளது. இதையடுத்து உஷாரடைந்துள்ள அரசாங்கம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

கன மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் வடிகான்கள் மற்றும் கைவிடப்பட்ட காணிகளில் துப்புரவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் மிகுந்த கவனமாக

இருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.2020 இல்,31139 பேரும், 2021 இல்,35054 பேரும் மற்றும் 2022 ஆம்,ஆண்டில் 76,467 பேரும் டெங்குத் தொற்றினால் பாதிக்கபட்டனர். இந்நிலையில் இவ்வாண்டின் டிசம்பர் 04 வரையில் 77,487 பேருக்கு டெங்கு தொற்றியுள்ளது.

நாளாந்தம் 250 பேர்,டெங்கின் தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். இவ்வாண்டிலர் 746 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT