அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு | தினகரன்

அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு

Unknown Womens Body Without Head Found-Sewanagal Kiri-ibban River

செவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலையற்ற உடல்  பகுதியொன்று காணப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு (119) கிடைத்த தகவலுக்கு அமைய செவணகல பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேலும், குறித்த பிரதேசத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், செவணகல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...