துப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி | தினகரன்

துப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி

துப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி-Hakmana Shooting Piradesa Sabha Member 53 Killed

ஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த, லொக்கு ஹக்குருகே ஷாந்த  எனும் 53 வயதான, ஹக்மண பிரதேசசபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

இன்று (04) பிற்பகல் 4.30 மணியளவில் ஹக்மண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கெபிலியபொல பிரதேசத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் ஒன்றில் வந்த குழுவினரால் குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த நபர் ஹக்மண, கங்கொடகம  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹக்மண பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...