Wednesday, April 24, 2024
Home » கொழும்பில் புதிய அலுவலகத்தை திறந்துள்ள IMM கன்சல்ட் நிறுவனம்

கொழும்பில் புதிய அலுவலகத்தை திறந்துள்ள IMM கன்சல்ட் நிறுவனம்

by gayan
December 6, 2023 6:30 am 0 comment

துபாயை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான IMM கன்சல்ட், கொழும்பில் தனது புதிய அலுவலகத்தை திறந்து வைத்துள்ளது. இந்த விரிவாக்கம் IMM கன்சல்ட்டின் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.

ஷமீர் நிசார் மற்றும் குலாம் மத்னி ஆகியோரால் துபாயில் நிறுவப்பட்ட IMM கன்சல்ட், இடம்பெயர்வு ஆலோசனையில் விரைவாக நம்பகமான பெயராக மாறியுள்ளது. சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் குடியேற்ற செயல்முறைகளில் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுவதற்கான பணியினை திறம்பட செய்து வருகின்றது. நிறுவனம் ஏற்கனவே துபாயில் ஒரு வலுவான இருப்பை நிறுவியுள்ளது. இந்த புதிய அலுவலகத்தை கொழும்பில் திறப்பது வாடிக்கையாளர்களுக்கான அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகின்றது.

கனடா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 கண்கள் நாடுகளுக்கான இடம்பெயர்வு சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற IMM கன்சல்ட் அதன் தனித்துவமான சேவைக்காக தொழில்துறையில் சிறந்து நிற்கிறது.

IMM கன்சல்ட் அதன் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் பெருமிதம் கொள்கிறது, அதன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீர்வுகளை வழங்குகிறது.

IMM கன்சல்ட் இணை நிறுவனர் ஷமீர் நிசார் கூறுகையில், ‘ஐஆஆ கன்சல்ட் இன் நிபுணத்துவத்தை இலங்கையின் கொழும்பிற்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் இடம்பெயர்வு செயல்முறையை சீராகச் செய்ய நாங்கள் முயற்சிப்பதால், சிறப்பான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவைக்கான எங்கள் அர்ப்பணிப்பு ஒப்பற்றது’ எனக் குறிப்பிட்டார்.

இணை நிறுவனர் குலாம் மத்னி கூறுகையில், ‘கொழும்பில் எங்களின் புதிய அலுவலகத்தை திறந்து வைப்பது, நமது தடத்தை மூலோபாய ரீதியாக விரிவுபடுத்துவதற்கான எங்களின் பார்வையை பிரதிபலிக்கிறது. மதிப்பிற்குரிய 5 கண்கள் நாடுகளுக்கு எங்கள் சிறப்பு சேவைகளை வழங்கி, இலங்கையில் வாடிக்கையாளர்களின் இடம்பெயர்வு பயணத்திற்கு பங்களிக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ எனக் கூறினார்.

இலங்கையின் கொழும்பில் உள்ள புதிய கிளையானது, 5 கண்கள் நாடுகளுக்கு இடம்பெயர விரும்பும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு விரிவான இடம்பெயர்வு ஆலோசனை சேவைகளை வழங்கி, பிராந்தியத்தில் IMM கன்சல்ட்டின் இருப்பை மேலும் வலுப்படுத்தும். இந்த விரிவாக்கமானது, உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு குடியேற்ற செயல்முறையை சீராகவும், திறமையாகவும், மன அழுத்தமில்லாததாகவும் மாற்றும் நிறுவனத்தின் நோக்கத்துடன் ஒருமுகப்படுகின்றது.

வளர்ச்சி மற்றும் வெற்றியின் இந்த அற்புதமான அத்தியாயத்தை எங்களுடன் இணைந்து கொண்டாடுவதில் ஆர்வமுள்ள அனைத்து தரப்பினருக்கும் நலன் விரும்பிகளுக்கும் திறந்த அழைப்பை நாங்கள் விடுக்கின்றோம். எங்கள் இடம்பெயர்வு சலுகைகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு மற்றும் விசாரணைகளுக்கு, 94 77 798 2379 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும் அல்லது ttps://www.immconsults.com/ இல் உள்ள எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT