பங்குச் சந்தை விலைகள் அதிகரிப்பு | தினகரன்

பங்குச் சந்தை விலைகள் அதிகரிப்பு

கடந்த 05 வருடங்களில் சரித்திரத்தில் என்றுமில்லாதவாறு பங்குச்சந்தைப் பங்குகளின் விலை கடந்த மூன்று தினங்களாக அதிகரித்து வருகிறது.

நேற்றைய தினம் பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளும் 20.14 அலகுகளால் அதிகரித்துள்ளன. இதற்கமைய பங்குச் சந்தையின் 31.64 மில்லியன் பங்குகள் முதலீட்டாளர்களுக்கிடையே நேற்றைய தினம் பரிமாறப்பட்டுள்ளன. அதன் எண்ணிக்கை 7 ஆயிரத்து 729 என அறிக்கைகள் கூறுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் பங்குச் சந்தையில் அனைத்து பங்குகளின் விலையும் அதிகரித்துள்ளதாக பங்குச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முனதினம் அனைத்து பங்குகளினதும் விலைச் சுட்டியின் அலகு 112.22 ஆல் அதிகரித்ததோடு இறுதியில் அதன் வீதம் 5,944.18 அலகாக காணப்பட்டது. அது கடந்த வெ ள்ளிக்கிழமை பங்குச் சந்தையை விட நூற்றுக்கு 1.92 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இதேவேளை S&P SL20 சுட்டி அன்றையதினம் 61.26 அலகால் அதிகரித்துள்ளது. அது முந்தைய நாளுடன் ஒப்பீட்டளவில் 2.04 சதவீத அதிகரிப்பாகும். அன்றையதின முடிவில் S&P SL20 சுட்டி 3,058.59 அலகாக அதிகரித்திருந்ததாகவும் அறிக்ைககள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் இன்னுமொரு முக்கிய சம்பவமாக 4 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான நாளாந்த கொடுப்பனவு இடம்பெற்றதாகவும் அறிக்ைககள் கூறிகின்றன.

பங்குச் சந்தை விலையதிகரிப்புக்கு அதிக பங்களிப்பை வழங்கியவர்கள் டிஸ்டிலரிஸ், கொமர்ஷல் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் மற்றும் ஜோன்கீல்ஸ் ஹோல்டிங்ஸ் என அறிக்ைககள் கூறுகின்றன.

 


Add new comment

Or log in with...