மான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு | தினகரன்


மான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு

மான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு-Deer Hunt-Shooting-1 Arrested-1 Injured
(வைப்பக படம்)

ஒருவர் காயம்; மற்றையவர் கைது

உடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் உடவளவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மற்றைய சந்தேகநபரிடமிருந்து T56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டாக்கள் 27 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் மான் இறைச்சி மற்றும் கொல்லப்பட்ட மான்களையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
 


Add new comment

Or log in with...