பிரதமரின் ஆசனம் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு | தினகரன்

பிரதமரின் ஆசனம் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு

பிரதமரின் ஆசனம் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு-PM's Seat Allocated for Prime Minister Mahinda Rajapaksa

பாராளுமன்றத்தில் பிரதமருக்கு உரித்தான ஆசனம் உள்ளிட்ட அனைத்து வரப்பிரசாதங்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக அறிவிக்கப்பட்டு வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளதால், பாராளுமன்றத்தில் பிரதமருக்கான ஆசனத்தை அவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...