Monday, October 29, 2018 - 13:04
மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இன்று (29) கண்டி உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு விசாரணை தொடர்பில், கடந்த ஒக்டோபர் 18 ஆம் திகதி தெல்தெனிய நீதவான் ஷானக கலன்சூரிய முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேருக்கும் நவம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment