வடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி | தினகரன்

வடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி

வடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி-Jaffna Vadamaradchi Attack-One Dead-3 Injured

மூவர் படுகாயம்

பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்

வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழ்ந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பருத்திதுறை  பொலிஸார் குறிப்பிட்டனர்.

மூன்று வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், முதலாவது வீட்டில் உறக்கத்திலிருந்த கணவன் மற்றும் மனைவி மீது கொலைவெறித் தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் எம்.சித்திரவடிவேல் (50) யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி-Jaffna Vadamaradchi Attack-One Dead-3 Injured

அவரது மனைவி ஜெயந்திக்கு (40) தலையில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் அதே வைத்தியசாலையில் சத்திரச்சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டிற்கு சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மற்றுமொரு வீட்டிலும் குறித்த பாணியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி-Jaffna Vadamaradchi Attack-One Dead-3 Injured

இதனால் அவ்வீட்டிலிருந்த ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்தார். அதில்  படுகாயமடைந்தவரை தாக்குதலாளி குறித்த வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் வரை வெளியே இழுத்து சென்று போட்டுவிட்டு சென்றுள்ளார்.

இவ்விரு தாக்குதலுக்கும் கத்தி மற்றும் கோடரி போன்ற ஆயுதங்கள் பாவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் ஒரு குடும்பப் பிரச்சினையை பின்னணியாக கொண்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சந்தேகநபராக இனங்காணப்பட்ட மருமகன் முறையிலான ஒருவரை தேடி வருகின்றனர்.

வடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி-Jaffna Vadamaradchi Attack-One Dead-3 Injured

முதலாவது வீட்டில் தாக்குதலுக்குள்ளானோரின் மகள் இருவர் குறித்த தாக்குதலுக்கு இலக்காகவில்லை எனவும், அவர்களில் ஒருவர் வேறொரு அறையிலும் மற்றொருவர் தாக்குதலுக்கு இலக்கான தம்பதியர்களின் பேத்தியின் வீட்டில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்


Add new comment

Or log in with...