கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது | தினகரன்

கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது-Police Security Tightened for Colombo-IGP

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய கொழும்பின் பாதுகாப்பு தொடர்பில் இன்றைய தினம் (30)  சுமார் 2,000 ஆயிரம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர.

அது மாத்திரமன்றி போக்குவரத்து கடமைக்காக சுமார் 600 பொலிஸ் அதிகாரிகளும் விசேட அதிரடிப்படையின் 10 விசேட குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சட்ட ஒழுங்கை பேணும் பொருட்டான நடவடிக்கையில் ஈடுபடுமாறும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், குறிப்பாக பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் செயற்படுமாறு  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வேண்டுகோள் விடுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்றையதினம் (30)  ஐக்கிய தேசிய கட்சி தனது ஆதரவாளர்களை, கொழும்பிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான, அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலும் அரச சொத்துகளுக்குள் நுழைவதை தடுக்கும் வகையிலும் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு மேலதிக நீதவானினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...