இந்தியாவுடன் மேலும் வர்த்தகத்தில் ஈடுபடுங்கள் | தினகரன்

இந்தியாவுடன் மேலும் வர்த்தகத்தில் ஈடுபடுங்கள்

ஜப்பானியத் தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசிய இந்தியப் பிரதமர் மோடி இந்தியாவுடன் அதிகமாக வர்த்தகத்தில் ஈடுபடுமாறு கூறினார்.

இந்தியா -– ஜப்பான் இடையிலான 13-வது வருடாந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ஜப்பான் சென்றார். தலைநகர் டோக்கியோவில் நேற்று நடைபெற்ற இரு தரப்பு உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் பங்கேற்றனர்.

இதில் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தைக்கு முன் இரு நாட்டு தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசிய மோடி, ''இந்தியாவுடன் இன்னும் அதிகமாக வர்த்தகத்தில் ஈடுபடுங்கள். சர்வதேச அளவில் இந்தியா சிறந்து விளங்க உங்களின் (ஜப்பானிய தொழில்துறை தலைவர்களின்) ஈடுபாடு உதவும்'' என்று தெரிவித்தார். மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் ஒப் இந்தியா உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் ஈடுபடுத்திக் கொள்வதில் ஜப்பான் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...