பெற். கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு; மூவரில் ஒருவர் பலி (UPDATE) | தினகரன்


பெற். கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு; மூவரில் ஒருவர் பலி (UPDATE)

துப்பாக்கிச் சூடு; அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர் கைது-Arjuna at CEYPETCO-Shooting-2 Injured

தெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியாகியுள்ளார்.

தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைமையகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 34 வயதான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


துப்பாக்கிச் சூடு; அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர் கைது (5.44pm)

தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைமையகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெமட்டகொடையிலுள்ள,  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அர்ஜுன ரணதுங்க  சென்றிருந்த வேளை அங்கு அமைதியற்ற நிலை தோன்றியுள்ளது. இதன்போது அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளால் துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...