தீபாவளி பரிசு: 600 ஊழியர்களுக்கு ரூ.5 இலட்சம் பெறுமதியான கார் | தினகரன்

தீபாவளி பரிசு: 600 ஊழியர்களுக்கு ரூ.5 இலட்சம் பெறுமதியான கார்

வைர வியாபாரி வழங்கினார்

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சாவ்ஜி தோலாகியா தன் நிறுவனத்தில் பணியாற்றும் 600 ஊழியர்களுக்கு ரூ.5 இலட்சம் பெறுமதியான கார்களை தீபாவளிப் பரிசாக வழங்கியுள்ளார்.

இந்தவிழாவில் பிரதமர் மோடி வீடியோ கொன்பிரன்ஸ் முறையில் பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

சூரத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரி சாவ்ஜி தோலாகியா, ஹரி கிருஷ்ணா வைர ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஆண்டுதோறும் தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசு, சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு ஊக்கப் பரிசு ஆகியவற்றை வழங்கி அவர்களை திக்குமுக்காடச் செய்வார்.

கடந்த 2017—ம் ஆண்டு 1,200 ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கி அசத்தினார். இந்த சூழலில் இந்த ஆண்டு தீபாவளிக்கு 600 ஊழியர்களுக்கு ரூ.5 இலட்சம் பெறுமதியான கார்களை பரிசாக வழங்கி உள்ளார்.


Add new comment

Or log in with...