ரவி கருணாநாயக்கவின் வீட்டை படம்பிடித்த இருவர் கைது | தினகரன்

ரவி கருணாநாயக்கவின் வீட்டை படம்பிடித்த இருவர் கைது

ரவி கருணாநாயக்கவின் வீட்டை படம்பிடித்த இருவர் கைது-2 Arrested for Recording Video of Ravi Karunanayake's House

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் உள்ள வீட்டை ‘ட்ரோன்’ (Drone) விமானத்தின் மூலம் படப்பிடிப்பு செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் விளம்பர வடிவமைப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவரும் ‘ட்ரோன்’  படப்பிடிப்பாளர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஊடக நிறுவனமொன்று, தனது வீட்டை  'ட்ரோன்' விமானம் மூலம் படப்பிடிப்பு மேற்கொண்டதாக  பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (25) சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்திருந்தார்.

அதற்கமைய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தலங்கம பொலிசார், குறித்த சந்தேகநபர்கள் இருவரை கைது செய்து விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு அருகிலுள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான காணியை படப்பிடிப்பு  செய்ததாக அவர்கள் பொலிசில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

வன பாதுகாப்பு திணைக்களத்தின் நிகழ்ச்சி ஒன்று தொடர்பிலான படக்காட்சி ஒன்றுக்காக குறித்த படப்பிடிப்பு மேற்கொண்டதாக அவர்கள் தங்களது வாக்குமூலத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில், வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரியிடமும்  பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...