Home » பத்து பேர்ச் காணித்துண்டு திட்டத்தை அவிசாவளையில் ஆரம்பியுங்கள்

பத்து பேர்ச் காணித்துண்டு திட்டத்தை அவிசாவளையில் ஆரம்பியுங்கள்

by damith
December 5, 2023 8:30 am 0 comment

பெருந்தோட்ட மக்களுக்கான பத்து (10) பேர்ச் வீடமைப்பு காணி திட்டம் முதலில், கொழும்பு மாவட்ட அவிசாவளை தொகுதி பென்ரித் தோட்டம் கருங்காளி பிரிவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என,தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். கொழும்பு மாவட்ட அவிசாவளை தொகுதி பென்ரித் தோட்டம் கருங்காளி பிரிவில் ஏற்பட்ட தீவிபத்தின் சேதங்களை பார்வையிட சென்றபோதே மனோ கணேசன் எம்பி இவ்வாறு கூறினார் ஊடகங்களுக்கு அவர் கூறியதாவது :

இங்கே இடம்பெற்றுள்ள தீவிபத்தில் எட்டு வீடுகள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. இன்னமும் நான்கு வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகி உள்ளன. இங்கே ஏறக்குறைய இருபது குடும்பங்கள் வாழ்வதாக அறிகிறேன். இந்த இருபது குடும்பங்களுக்கும் வீடுகளை கட்டிக்கொள்ள தலா பத்து (10) பேர்ச் காணி துண்டுகள் வழங்கப்பட வேண்டும்.

பெருந்தோட்ட குடும்பங்களுக்கு வீடமைக்க காணி வழங்குவதாகக் கூறி, நானூறு கோடி ரூபாவை ஜனாதிபதி ஒதுக்கியுள்ளார்.

இங்கே அனைவரும் இந்த தோட்டத்தில் பணி புரிபவர்கள் அல்ல. வெளியில் மாற்று தொழில் செய்பவர்களும் இங்கே உள்ளனர். ஆனால், அனைவரும் இங்கேதான் பரம்பரை பரம்பரையாக நீண்ட காலம் வாழ்கின்றனர். ஆகவே தலா பத்து (10) பேர்ச் காணி துண்டுகள் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

சொந்தமாக வருமானம் உள்ளவர்கள் அரசாங்கம் தரும் காணியில் வீடு கட்டிக்கொள்ள வேண்டும். இயலாதவர்களுக்கு அராசங்கம், இலங்கை, இந்திய வீடமைப்பு திட்டங்களின் கீழ் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். இதுதான் நிரந்தர தீர்வு. இதுதான் எனது கோரிக்கை என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT