மண்சரிவினால் தடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு | தினகரன்

மண்சரிவினால் தடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு

மண்சரிவினால் தடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு-After Landslide Nanu Oya A7 Transport Back to Normal

நானுஓயா, டெஸ்போட்  ஏ7 வீதியில்  ஏற்பட்ட மண்சரிவினால் தடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

கடந்த இரு தினங்களாக இப்பிரதேசத்தில் பெய்த கடும் மழையால், டெஸ்போட் 168 வது மைல் கல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (22) இரவு இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டது.

மண்சரிவினால் தடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு-After Landslide Nanu Oya A7 Transport Back to Normal

இந்த மண்சரிவு காரணமாக நுவரெலியா, தலவாக்கலை மற்றும் மெராயா வழியூடாக டயகமைக்கான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து நீண்ட நேர சிரமத்தின் பின் நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை நுவரெலியா பிரதேசத்திற்கு தொடர்ச்சியாக பெய்து வருவதனால் இவ்வாறான மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதனாலம், சாரதிகள் மற்றும் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)


Add new comment

Or log in with...