இடியுடன் கூடிய மழை இன்று மேலும் அதிகரிக்கும் | தினகரன்

இடியுடன் கூடிய மழை இன்று மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு பகுதியில் தற்போது பெய்துவரும் இடியுடன் கூடிய மழை இன்று மேலும் அதிகரிப்பதுடன் சில பகுதிகளில் 100 முதல் 150 மி.மீ மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் வரையிலுமுள்ள கரையோர பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டின் வடக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.


Add new comment

Or log in with...