ரூபா 530 இலிருந்து ரூபா 1,000 ஆக அதிகரிக்க முடியாது | தினகரன்

ரூபா 530 இலிருந்து ரூபா 1,000 ஆக அதிகரிக்க முடியாது

ரூபா 530 இலிருந்து ரூபா 1,000 ஆக அதிகரிக்க முடியாது-Plantation Workers Protest-Cant Increase Rs.530 to Rs. 1000 Salary Increment

- தோட்டத் முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு
- பேச்சுவார்த்தை தோல்வி; தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராட்டம்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி கொட்டகலை நகரில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி, வேன் சாரதிகள், இளைஞர், யுவதிகள் என பலரும் ஒன்றிணைந்து இன்று (25) காலை ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

தற்போது தோட்டத் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூபா 530 இனை சம்பளமாக பெறுகின்றனர். அதனை ரூபா 1,000 ஆக உயர்த்துமாறு கோரியே, அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரூபா 530 இலிருந்து ரூபா 1,000 ஆக அதிகரிக்க முடியாது-Plantation Workers Protest-Cant Increase Rs.530 to Rs. 1000 Salary Increment

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு உடன்படிக்கை தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்த நிலையில், கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக அணிதிரண்ட கொட்டகலை பிரதேச தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக கொட்டகலை வூட்டன் நகருக்கு வந்து பிரதான வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ரூபா 530 இலிருந்து ரூபா 1,000 ஆக அதிகரிக்க முடியாது-Plantation Workers Protest-Cant Increase Rs.530 to Rs. 1000 Salary Increment

பதாதைகளையும், கறுப்பு கொடிகளையும் ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாடத்திற்கு கொட்டகலை நகர வர்த்தகர்கள் தங்களது வியாபார நிலையங்களை மூடி ஆதரவு வழங்கியதோடு, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

ரூபா 530 இலிருந்து ரூபா 1,000 ஆக அதிகரிக்க முடியாது-Plantation Workers Protest-Cant Increase Rs.530 to Rs. 1000 Salary Increment

இதேவேளை நேற்றைய தினம் (24) கொழும்பு காலிமுகத்திடலில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

Add new comment

Or log in with...