நமது வளத்தை பாதுகாத்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அங்கஜன் அழைப்பு | தினகரன்

நமது வளத்தை பாதுகாத்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அங்கஜன் அழைப்பு

நுணாவிற்குளம் தூர்வாரி புனரைமைப்பு-நமது வளத்தை பாதுகாத்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அங்கஜன் அழைப்பு-Deputy Minister Angajan-Nunavil-Kulam Desilting

நுணாவிற்குளம் தூர்வாரி திறந்து வைக்கும் நிகழ்வில் அங்கஜன் இராமநாதன்

நமது வளங்களை பாதுகாத்து, இருக்கும் வளங்களை சிறந்த முறைமையில் கையாண்டு நமது வடக்கின் பொருளாதார

ஸ்திர தன்மையினை வலிமையானதாக்கிக் கொள்ள உலக சொந்தங்களுக்கு விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

சாவகச்சேரி, நுணாவில் பிரதேச முருகன் ஆலய முன்றலில் அமைந்துள்ள நுணாவில் குள தூர்வாரி புனருத்தாரணப் பணிகள் நிறைவு பெற்று அதன் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்து, உரையாற்றும்போதே விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

நுணாவிற்குளம் தூர்வாரி புனரைமைப்பு-நமது வளத்தை பாதுகாத்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அங்கஜன் அழைப்பு-Deputy Minister Angajan-Nunavil-Kulam Desilting

உலக நாடுகளில் நமது சொந்தங்கள் செல்வச்செளிப்போடு இருக்கின்றார்கள், அவர்கள் நமது தேசம் மீதும் அளவு கடந்த நேசம் கொண்டுள்ளனர். எந்தளவு தூரம் நமது சேமிப்புகளை வலுவுள்ளதாக்கியுள்ளமோ அதே அளவுக்கு நமது வளங்களையும் சேமித்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஆய்வறிக்கை ஒன்றிலே நமது மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நமது தலைமுறையினருக்காக அதன் தார்ப்பரியத்தினை
நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நமது வளங்கள் குறித்து அனைவரிடமும் அந்த சிந்தனையும் கொள்கையும் செயலாக்கம் பெறவேண்டும்.

யாழ் குடா நாட்டில் உலக சொந்தங்களினால் ஆலயங்களை நிர்மாணம் செய்வதற்கும், புனருத்தாபனம் செய்வதற்கும் நிதிகள் வழங்கப்படுவதை போல, கோவிலுக்கு முன்பாகவே அமைந்துள்ள இந்த குளத்தினை புனரமைத்ததன் மூலம் வானம் பார்த்த பூமியைக் கொண்டவர்களுக்கும், நிலத்தடி நீரையும் நம்பி விவசாயம் செய்பவர்களுக்குமாக இவ்வாறான வளங்களையும் பாதுகாக்க வேண்டும். அதன் மூலம் விவசாய தலைமுறையினரையும் பாதுகாக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

வடக்கின் விவசாயிகளின் நலன் கருதி, பழ வகைகள் மற்றும் மரக்கறி வகைகள் தரமான முறையில், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் உற்பத்தி செய்வதற்கான செயற்பாடுகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதற்கு, அறுவடைக்கு பின்னரான தேசிய நிறுவனம் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் சிறந்த கொள்கைத் திட்டமாக வெற்றியளித்திருக்கும் உணவக நிர்மாண திட்டத்தை, வாழ்வாதாரத்தையும் தொழில் வாய்ப்பினையும் ஏற்படுத்தும் முகமாக மேலும் பல உணவக நிலையங்களை கொண்டு வரப்படவுள்ளது. ஆயினும் சில ஊடகங்களினால் அது தவறாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நுணாவிற்குளம் தூர்வாரி புனரைமைப்பு-நமது வளத்தை பாதுகாத்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அங்கஜன் அழைப்பு-Deputy Minister Angajan-Nunavil-Kulam Desilting

அண்மையில் வெளிவந்த தரம் ஐந்தில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சித்தி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு, பிரதியமைச்சரினால மா, பலா மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

பாடசாலைகளிலும் பழமர தோட்டங்களை உருவாக்கி இயற்க்கை பழகனிகளை சந்ததயினருக்கு வழங்கும் பொருட்டு, அண்மையில் பழமர கன்றுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு, பாடசாலை வளாகங்களில் பிரதியமைச்சரினால் மர நடுகையும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் Jura Foundation நிறுவன உத்தியோகத்தர்கள், விவசாய பெருமக்கள்,
அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பிரதேசவாசிகள், ஆலய நிர்வாகத்தினர் என பலர் இணைந்திருந்தனர்.

(வி. தயாளன்)


Add new comment

Or log in with...