கத்திக்குத்து தாக்குதல்: பலஸ்தீனர் சுட்டுக் கொலை | தினகரன்

கத்திக்குத்து தாக்குதல்: பலஸ்தீனர் சுட்டுக் கொலை

மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்திய பலஸ்தீனர் ஒருவர் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஹெப்ரோன் நகரில் இப்ராஹிமி பள்ளிவாசலுக்கு அருகில் நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இஸ்ரேல் வீரருக்கு சிறு காயம் ஏற்பட்டிருப்பதோடு அங்கிருந்த ஏனைய இஸ்ரேலிய படையினர் பலஸ்தீனர் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை முறிந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் பலஸ்தீனர்கள் கத்திக்குத்து மற்றும் வாகனத்தை மோதவிட்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறான சம்வங்கள் இடைக்கிடையே தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.


Add new comment

Or log in with...