உலகின் நீண்ட கடல் பாலம் இன்று திறப்பு | தினகரன்

உலகின் நீண்ட கடல் பாலம் இன்று திறப்பு

சீனாவையும் ஹொங்கொங்கையும் இணைக்கும் 56 கி.மீ நீளமுள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம் இன்று திறக்கப்படவுள்ளது.

ஹொங்கொங்கிலிருந்து சீனாவுக்கு கடல் மார்க்கத்தில் செல்லக்கூடிய உலகின் மிக நீண்ட பாலத்தின் கட்டுமானப் பணி தொடங்கி 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது அதற்கான பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இப்பாலத்தின் திறப்பு விழாவுக்காக சீனாவில் உள்ள சூஹாய் நகரம் தயாராகி வருகிறது.

இப்பாலம் கடந்த 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட இருந்தது. ஆனால் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்களால் பாலத் திறப்பு தள்ளிப்போடப்பட்டது. தெற்கு சீனா முழுவதும் 56,500 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீனா திட்டத்தின் முக்கிய ஒரு அங்கமே இதுவாகும்.

இது ஹொங்கொங் மற்றும் மக்காவு போன்ற 11 நகரங்களை உள்ளடக்கியுள்ளதோடு 68 மில்லியன் மக்களை இப்பாலம் இணைக்கிறது.


Add new comment

Or log in with...