5th ODI: SLvENG; இலங்கை அதிரடி ஆட்டம் வெற்றி இலக்கு 367 | தினகரன்

5th ODI: SLvENG; இலங்கை அதிரடி ஆட்டம் வெற்றி இலக்கு 367

5th ODI: SLvENG; இலங்கை அதிரடி ஆட்டம் வெற்றி  இலக்கு 367-5th ODI SLvENG- Sri Lanja set 367 runs target

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் 5 ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 366 ஓட்டங்களைப் பெற்றது.

தொடரினை இழந்துள்ள நிலையில் ஆறுதல் வெற்றியினை பெற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ள இலங்கை அணி இன்று களம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்பில் மீண்டுமொருமுறை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சதீர சமரவிக்ரம மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஜோடி சிறப்பான ஆரம்பத்தினை பெற்றுக் கொடுத்தது.

இருவரும் இணைந்து இணைப்பாட்டமாக 137 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளையில், சதீர சமரவிக்கிரம 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய நிரோஷன் திக்வெல்ல 95 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர் முழுவதும் சோபிக்கத் தவறிய குசல் மெண்டிஸ் அதிரடியாக ஆடி 33 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய தினேஷ் சந்திமால் 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில், அகில தனஞ்சய மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோரின் இறுதி நேர அதிரடி துடுப்பாட்டத்தை தொடர்ந்து இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 366 எனும் ஓட்ட எண்ணிக்கையை அடைந்தது.

இலங்கை 366/6 (50.0)
நிரோஷன் திக்வெல்ல 95 (97)
தினேஷ் சந்திமால் 80 (73)
குசல் மெண்டிஸ் 56 (33)

மொயின் அலி 2/57 (8.0)
டொம் குர்ரன் 2/71 (8.0)
லயம் பிளங்கட் 1/44 (5.0)
ஆதில் ரசீத் 1/52 (10.0)

(அஸாfப் மொஹமட்)


Add new comment

Or log in with...