5th ODI: SLvENG; இலங்கை முதலில் துடுப்பாட்டம் | தினகரன்

5th ODI: SLvENG; இலங்கை முதலில் துடுப்பாட்டம்

5th ODI: SLvENG; இலங்கை முதலில் துடுப்பாட்டம்-5th ODI-SLvENG-SL won the Toss-Bat-RPS

5th ODI: இலங்கை முதலில் துடுப்பாட்டம்

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட்  போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இப்போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் மைதானத்தில் இப்போட்டி இடம்பெறுகின்றது

இலங்கை அணி சார்பில் கடந்த போட்டியில் விளையாடிய லசித் மாலிங்க, மற்றும் அமில அபொன்சோ ஆகிய இருவரும் இப்போட்டியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதோடு, அவர்களுக்கு பதிலாக   லக்‌ஷான் சந்தகன், துஷ்மந்த சமீர ஆகியோர் அணியில் இணைத்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இங்கிலாந்து அணி சார்பில் கடந்த போட்டியில் விளையாடிய அவ்வணியின் தலைவர் ஒய்ன் மோகன் மற்றும் கிறிஸ் வோக்ஸ், ஒல்லி ஸ்டொன் ஆகியோருக்கு பதிலாக, லயம் பிளங்கட், சேம் குர்ரன், மார்க் வூட் ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அணியின் தலைவர் ஒய்ன் மோகன் இப்போட்டியில் விளையாடாததன் காரணமாக இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் வழி நடாத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட இத் தொடரில், முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலை ஏனைய மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் இப்போட்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி: நிரோஷன் திக்வெல்ல (வி.கா), சதீர சமரவிக்ரம, தினேஷ் சந்திமால் ( தலைவர்), குசல் மெண்டிஸ், தனஞ்சய  டி சில்வா,  தசுன் ஷானக, திசர பெரேரா, அகில தனஞ்சய, லக்‌ஷான் சந்தகன், கசுன் ராஜித, துஷ்மந்த சமீர

இங்கிலாந்து அணி:  ஜேசன் ரோய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜொய் ரூட், ஜோஸ் பட்லர் (வி.கா- தலைவர்), பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, சேம் குர்ரன், ஆதில் ரசீத், லயம் பிளங்கட், டொம் குர்ரன், மார்க் வூட்


Add new comment

Or log in with...