ரங்கன ஹேரத் இங்கிலாந்துடனான காலி டெஸ்ட்டின் பின் ஓய்வு | தினகரன்

ரங்கன ஹேரத் இங்கிலாந்துடனான காலி டெஸ்ட்டின் பின் ஓய்வு

ரங்கன ஹேரத் இங்கிலாந்துடனான காலி டெஸ்ட்டின் பின் ஓய்வு-Rangana Herath-Retire After Eng Galle Test-on Nov 06

இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள இங்கிலாந்து  கிரிக்கெட் அணியுடன் காலியில் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியை அடுத்து, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மூன்று போட்டிகளைக் கொண்ட குறித்த  தொடரில் முழுமையாக கலந்துகொள்ள முடியாதுள்ளதாக அவர் இலங்கை அணியின் தேர்வாளர்களிடம்  தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச காலி கிரிக்கெட் மைதானத்திலேயே அவர் தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தார். 1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியே அவரது கன்னி டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

40 வயதான ரங்கன ஹேரத், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 430 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆகக்கூடுதலான வாக்குகளை பெற்றவர்கள் பட்டியலில்  ரங்கன ஹேரத் தற்போது வரை பத்தாவது இடத்தை வகிக்கின்றார்.

அவர் பங்குபெறவுள்ள இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றுவாராயின்,  டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுகளை பெற்றவர்கள் வரிசையில் ஏழாவது இடத்தை வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுகளை பெற்றவர்கள் வரிசையில், ரங்கன ஹேரத்தை விட ஓய்வு பெற்ற பந்துவீச்சாளர்களான ரிச்சர்ட் ஹட்லீ 431 விக்கெட்டுகள், ஸ்டுவர்ட் ப்ரோட் 433 விக்கெட்டுகள், கபில் தேவ் 434 விக்கெட்டுகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...