துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபை ஊழியர் பலி | தினகரன்

துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபை ஊழியர் பலி

துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபையில் ஊழியர் பலி-Matara-Urubokka-Hulankanda Shooting-44 Year Old Killed

மாத்தறை, ஊறுபொக்க, ஹுலங்கந்த பிரதேசத்தில்  இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.

இன்று (22) காலை 9.25 மணியளவில், தம்பஹல வீதியில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், பஸ்கொட பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் 44 வயதான நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த நபர், மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாரிய காயங்களுக்குள்ளான குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர், அக்குரஸ்ஸவத்த, வலஸ்முல்லை பிரதேசத்தைச் சேர்ந்த, ஈ.எஸ். சமிந்த தயாரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஊறுபொக்க பொலஸ் நிலையம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...