Friday, March 29, 2024
Home » பிலிப்பைன்ஸில் தொடரும் அதிர்வால் மக்கள் அச்சம்

பிலிப்பைன்ஸில் தொடரும் அதிர்வால் மக்கள் அச்சம்

by damith
December 5, 2023 1:04 pm 0 comment

பிலிப்பைன்ஸில் பூகம்பத்திற்கு பிந்திய நில அதிர்வுகளால் அச்சமடைந்துள்ள ஆயிரக்கணக்கானவர்கள் முகாம்களிலிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர்.

தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பூகம்பத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர். “நாங்கள் நில அதிர்வுகளால் பயந்துபோயிருக்கிறோம்” என்று சுரிகாவ் டெல் சுர் வட்டாரத்தின் அனர்த்த முகாமைத்துவ தலைவர் அலேக்ஸ் அரானா தெரிவித்துள்ளார். அவரது கடலோர மாகாணம் பூகம்பத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ளது. கடந்த சனிக்கிழமை (02) 7.4 ரிக்டர் அளவுள்ள பூகம்பம்; தாக்கியது. இதையடுத்து பின் அதிர்வுகள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஞாயிறு இரவு வரை சுரிகாவோ டெல் சுர் இடத்தில் உள்ள 115 முகாம்களில் 108,000க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர் என்று அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.

“நில அதிர்வுகளால் அடிக்கடி தலைசுற்றல் ஏற்படுகிறது. தற்போதைக்கு முகாமிலேயே தங்க விரும்புகிறோம்” என்று சுர்காவோ டெல் சுர் மாகாணத்தில் உள்ள ஹினாடுவான் நகர குடியிருப்பாளரான சுசன் கிளோர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT