பொலிஸ் மாஅதிபரை பதவி நீக்குவது அரசியலமைப்புக்கு உட்பட்ட சிக்கல்! | தினகரன்

பொலிஸ் மாஅதிபரை பதவி நீக்குவது அரசியலமைப்புக்கு உட்பட்ட சிக்கல்!

“பொலிஸ் மா அதிபர் ஒரு கோமாளியைப் போல் ஆகி விட்டார். முன்னாள் பொலிஸ் மாஅதிபர்கள் இவ்வாறு நடந்து கொண்டதில்லை. பொலிஸ் என்ற ஒன்று இப்போது இருக்கிறதா என்று கூட தெரியவில்லை. பொலிஸ் மாஅதிபரின் நடவடிக்கையினால் பிரதமரும் நானும் மிகுந்த கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறோம். இது தொடர்பாக விரைவிலேயே ஏதாவது செய்தாக வேண்டும். பொலிஸ் மாஅதிபரின் நடவடிக்கைகள் ஏளனத்துக்குரியவை. நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இது தொடர்பாக பாரதூரமான செயற்பாடுகளை செய்தாக வேண்டியுள்ளது.”

பொலிஸ் மாஅதிபரை இவ்வாறு விமர்சித்துள்ளவர் இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

தற்போதைய பொலிஸ் மாஅதிபரை மூன்று வருடங்களுக்கு முன்னர் அந்தப் பதவிக்கு நியமித்தவர் அவரேயாவார். எனினும் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து பொலிஸ் மாஅதிபர் மீது மேற்கூறியவாறு விமர்சனம் செய்தவரும் அவரேயாவார்.

தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளில் பொலிஸ் மாஅதிபரின் நடவடிக்கை தொடர்பான பிரச்சினை மிகவும் பாரதூரமானதாகும். பொலிஸ் மாஅதிபரின் நடவடிக்கைகளும் அவர் பேசிய பேச்சுக்களும் பாரதூரமாக பொதுமக்களால் விமர்சிக்கப்பட்டதுடன் பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து அவர் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற குரல் சமூகத்தில் எழுந்துள்ளது.

அப்பதவியில் இருந்து அவரை அப்புறப்படுத்தத் தொடங்கியுள்ளனர். பொலிஸ் மாஅதிபர் மீது குற்றம் சுமத்துவோர் இப்போது ஜனாதிபதியையும் அரசாங்கத்தில் உள்ள மற்றவர்களையும் விட்டுவிட்டு பிரதமரையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

பொலிஸ் மாஅதிபரை அப்பதவியில் இருந்து அப்புறப்படுத்தாமல் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியும் அவரைப் பாதுகாத்து வருவதாகக் கூறுகின்றர் சிலர்.

கூட்டு எதிரணி இது தொடர்பாக விடுத்து வரும் அறிக்கைகள் இதற்கு சிறந்த உதாரணமாக உள்ளன. ஜனாதிபதிக்கும் அவரது தரப்பினருக்கும் பொலிஸ் மாஅதிபரை அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியும் அவரை அப்பதவியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு பதிலாக அவரை பாதுகாத்து வருவதாக கூட்டு எதிரணி குற்றம் காட்டுகிறது.

உண்மையைக் கூறுவதானால் பொலிஸ் மாஅதிபரின் நடவடிக்கைகளினால் அரசாங்கத்தை விட அதிக விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பது ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதமருமாகும். பொலிஸ் மாஅதிபர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் என்று சிலர் கூறுவதே இதற்கு பிரதான காரணமாகும்.

இந்த விடயத்தைப் பற்றி நன்கு அறியாத தரப்பினர் கூறி வரும் இந்தக் கருத்து பொதுமக்களிடையே பரவலாகியுள்ள நிலையில் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியும் பொலிஸ் மாஅதிபரை பாதுகாப்பதாகவே கதைகள் பரவியுள்ளன.

ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் ஒரு அரசாங்க ஊழியரின் நடவடிக்கை காரணமாக பொதுமக்களின் விமர்சனத்துக்கு உள்ளாகுமேயானால் அந்த ஊழியர் அல்லது அதிகாரி உடனடியாக அந்த பதவியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறன்றி அந்த அதிகாரியை மறைமுகமாகப் பாதுகாக்க எந்தவொரு நபரோ கட்சியோ முன்வருமானால் அது ஒரு பாரதூரமான குற்றமாகும்.

எனினும் இந்த விடயத்தில் பிரதமர் மீதும் ஐக்கிய தேசியக் கட்சியின் மீதும் விடுக்கப்படும் குற்றச்சாட்டு முறையானதா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில் பொலிஸ் மாஅதிபரின் நியமனம் அரசியலமைப்புக்கு உட்படுத்தப்பட்டே மேற்கொள்ளப்பட்டதாகும். அவ்வாறான நிலையில் அவரைப் அறப்புறப்படுத்தும் விடயத்தில் பிரதமரோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ தலையீடு செய்ய மாட்டாது என்பதே யதார்த்தமாகும்.

அரசியலமைப்பு நியமனமங்கள்:

பொலி மாஅதிபர் நியமனம் அரசிலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அரசாங்க பதவியாகும். அரசிலமைப்பின் பிரகாரம் இவ்வாறான பதவிகளுக்கான நியமனம் ஜனாதிபதியினால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

பல்வேறு திருத்தச் சட்டங்களின் அறிமுகம் காரணமாக சில விதிமுறை மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், இவ்விடயம் தொடர்பான அரசியலமைப்பு நியமனங்களில் எந்த மாற்றமும் இடம்றெவில்லை. 1978 இன் ஷரத்தின் கீழ் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி அல்லது ஜனாதிபதியினால் எழுதப்பட்ட வேறு சட்டங்களின்படி அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களை ஜனாதிபதியே நியமிக்க வேண்டும்.

சட்ட மாஅதிபர், மற்றும் இராணுவத்தின் தலைவர்கள், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் சேவையின் உயர் பதவிகளையும் ஜனாதிபதியே மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் யார் இப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும். எந்த அடிப்படையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வழிகாட்டிகள் எதுவும் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.

1978 அரசியலமைப்புக்கு செய்யப்பட்ட 17வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் 54 ஆம் ஷரத்தின் 2000 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி ஜனாதிபதி மேற்படி நியமனங்களை அரசியலமைப்பு பேரவையுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படிஅரசியலமைப்பு பேரவையின் வழிகாட்டலின்படி மேற்படி அரசியலமைப்பு நியமனங்களை செய்ய முடியும்.

எவ்வாறெனினும் 2010 செப்டெம்பர் 8 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் கொண்டு வந்த அரசியலமைப்புக்கான 18வது திருத்தச் சட்டம் முன்னைய 17வது திருத்தச் சட்டத்தை மாற்றி மேற்கூறிய அரசியலமைப்பு நியமனங்களுக்கு அரசியலமைப்பு பேரவையின் வழிகாட்டலை முற்றிலும் மாற்றி அவ்வாறான நியமனங்களை ஜனாதிபதி நினைத்தவாறு மேற்கொள்ள வழிவகுத்தது.

இதனையடுத்து 2015இல் தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த 19வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின்படி 17வது திருத்தச் சட்டத்தில் இருந்தவாறு இவ்வாறான அரசியலமைப்பு நியமனங்களுக்கு மீண்டும் அரசியலமைப்பு பேரவையின் வழிகாட்டல் தேவை என்று மாற்றப்பட்டது.

இந்த மாற்றத்தின்படி இப்போது பொலிஸ் மாஅதிபரை அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்துடனேயே ஜனாதிபதியினால் மாற்ற முடியும்.

பொலிஸ் மாஅதிபர் எவ்வாறு நியமிக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு நியமனங்கள் கூறியுள்ள போதிலும் அவர் ஓய்வு பெறுவதற்கு முன் அவரை எப்படி பதவியில் இருந்து நீக்க முடியும் என்பதைப் பற்றி அரசியலமைப்பு நியமனங்களில் எதுவும் கூறப்படவில்லை.

மேற்கூறிய அம்சங்களை சற்று நோக்கும் போது பொலிஸ் மாஅதிபரை தொடர்ந்தும் பதவியில் வைத்திருக்க பிரதமரோ ஐக்கிய தேசியக் கட்சியோ செயற்படவில்லை என்பதுடன் இது அரசியலமைப்பு நியமனங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்பது நன்கு புலனாகிறது.

இந்தச் சிக்கலை தீர்ப்பதற்கான ஒரே வழி அதிகாரிகளை பதவி நீக்குவது என்ற 2002 இன் 5 ஆம் சட்ட விதியின் கீழ் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சரத்தை பின்பற்றுவதாகும் என்று அரசியலமைப்பு அவதானிகள் கூறுகின்றனர்.

இதன்படி பொலிஸ் மாஅதிபர் கீழ்க்காணும் தரவுகளில் எதையேனும் இழைத்திருப்பதாக ஜனாதிபதி கருதினால் அவரை குற்றவாளியாக கணித்து அவரை பதவியில் இருந்து நீக்க முடியும். அவ்வாறு பொலிஸ் மாஅதிபரை பதவியில் இருந்து நீக்கக் கூடிய குற்றங்கள் வருமாறு:

கடன் தீர்க்க முடியாமல் நொடித்துப் போனவர் என்று தகுதி பெற்ற நீதிமன்றமொன்று தீர்ப்ப வழங்குமானால்,நோய் அல்லது உடல்நலம் குறை அல்லது மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் அவர் தொடர்ந்தும் பதவியில் இருக்க தகுதியற்றவர்,ஒழுக்கமின்மை, துரோகம் அல்லது லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் பாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டால்,ஒழுங்கீனம் அல்லது ஊழல் குற்றவாளியாகக் காணப்பட்டால்,பதவியை துஷ்பிரயோகம் செய்ததில் குற்றவாளியாகக் காணப்பட்டால்,கடமையில் தவறிழைத்து குற்றவாளியாகக் காணப்பட்டால்,பதவியை பக்கச்சார்பாக பயன்படுத்தி குற்றவாளியாகக் காணப்பட்டால், இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தை முடிவுக்கு கொண்டு வருமிடத்து...

மேற்கூறிய காரணங்களில் குற்றவாளியாகக் காணப்படுமிடத்து பொலிஸ் மாஅதிபரை அவரது பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்க முடியும்.

அத்துடன் கீழ்க்காணும் குற்றங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குற்றங்களில் பொலிஸ் மா அதிபர் குற்றவாளியாக காணப்படின் அவர் மீது பாராளுமன்றத்தில் மசோதா ஒன்றை நிறைவேற்றுவதன் மூலம் ஜனாதிபதி அவரை பதவியில் இருந்து நீக்கலாம்.

தவறான நடத்தை அல்லது ஊழல் குற்றவாளியாக காணப்பட்டால்,பதவியை மொத்தமாக துஷ்பிரயோகம் செய்து குற்றவாளியாக காணப்பட்டால்,பதவியை மொத்தமாக புறக்கணித்ததில் குற்றவாளியாக காணப்பட்டால்,பதவியை மொத்தமாக பக்கச்சார்பாக பாவித்து குற்றவாளியாக காணப்பட்டால்...

இது அமுலுக்கு வர பாராளுமன்றத்தில் அதிகப்படி உறுப்பினர்களால் அங்கீகரக்கப்பட வேண்டும். மேற்படி உறுப்பினர்களின் அங்கீகரித்தலின்படி அமைக்கப்படும் விசாரணைக்குழு பொலிஸ் மாஅதிபரின் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்தும். இந்த சபையின் மூலம் அங்கத்தவர்கள் இருப்பார்கள்.

பிரதம நீதியரசரால் நியமிக்கப்படும் உச்சநீதிமன்ற நீதியரசர் குழுவின் தலைவராக இருப்பார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் இரண்டாவது உறுப்பினராக இருப்பார். சட்டம் அல்லது பொதுமுகாமைத்துவத் துறையில் உள்ள பண்பான ஒருவர் மூன்றாவது உறுப்பினராக இருப்பார். இவர் பிரதமர் அல்லது எதிர்க் கட்சித் தலைவரின் சிபாரிசின் பேரில் நியமிக்கப்படுவார்.

இந்த விசாரணைச் சபையின் முன் பொலிஸ் மாஅதிபர் மேற்கூறிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக காணப்படின் அவரை நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டு பெரும்பான்மை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் அதன் பின் அந்தத் தீர்மானம் ஜனாதிபதியிடம் கொண்டு செல்லப்படும். அதனையடுத்து பொலிஸ் மாஅதிபரை அவரது பதவியில் இருந்து அப்புறப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.

எனவே பொலிஸ் மாஅதிபர் ஓய்வு பெற முன்னர் அவரை அவரது பதவியில் இருந்து நீக்குவது மிகவும் சிரமமானது.

இதில் ஒரு விடயம் மிகவும் தெளிவாக உள்ளது. அதாவது தற்போதைய பொலிஸ் மாஅதிபரை தொடர்ந்தும் அவரது பதவியில் வைத்திருக்கவோ அல்லது பதவியில் இருந்து நீக்கவோ பிரதமர் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினால் எதுவும் செய்ய முடியாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கூட்டு எதிரணி உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களுக்கும் இந்த புரிதல் அவசியமாகும். எனவே இவ்விடயத்தில் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு பொதுமக்களை மேலும் மேலும் அலைக்கழிக்காமல் கூட்டு எதிரணி பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறன்றி இவ்விடயத்தில் கூட்டு எதிரணி பாராளுமன்றத்தில் மேற்கூறியவாறான மசோதா ஒன்றை கொண்டு வரலாம். அவ்வாறான மசோதாவொன்றை முன்வைக்குமாறு தற்போதைய அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

 

பேராசிரியர்

எம்.ஒ.ஏ.டி சொய்ஸா...


Add new comment

Or log in with...