மட்டக்களப்பு - கொழும்பு புகையிரதம் தடம் விலகல் | தினகரன்

மட்டக்களப்பு - கொழும்பு புகையிரதம் தடம் விலகல்

சீரமைக்கும் பணி தொடர்கிறது

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி  பயணி பயணித்த புகையிரதமொன்று, கொன்வெவ புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் விலகியுள்ளது.

நேற்று (21) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில்,மூன்று புகையிரத பெட்டிகள் இவ்வாறு தடம் விலகியுள்ளதாகவும்,. இதன் காரணமாக மட்டக்களப்பு புகையிரத பாதைகள் புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

சீரமைப்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் மட்டக்களப்பு நோக்கிய புகையிரத சேவையை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...