யாழ். நோக்கிச் சென்ற ரயிலில் மோதி காட்டுயானை பலி; மற்றொன்று காயம் | தினகரன்

யாழ். நோக்கிச் சென்ற ரயிலில் மோதி காட்டுயானை பலி; மற்றொன்று காயம்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட தபால் ரயிலில் இரு யானைகள் மோதி விபத்துக்குள்ளானதில் யானையொன்று ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளது. மற்றைய யானை பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் உயிருக்கு போராடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கமுவவுக்கும் அம்பன்பொலவுக்குமிடையே மீகஸ் சந்திக்கருகில் 96 ஆவது மைல்கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ரயிலில் மோதுண்ட இரண்டு யானைகளும் 20, 25 வயது இருக்கலாம் என்றும் இவை இரண்டும் பெண்யானைகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வழமையாக வரும் நேரத்தை விட 8 நிமிடங்கள் முன்கூட்டியே ரயில் வந்ததாகவும் வழமைக்கு மாறாக அதிக வேகத்துடன் ரயில் பயணித்ததாகவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...