Home » மட்டக்களப்பு நாவலடி சுகாதார நிலையம் ஆளுநரினால் திறப்பு
ரூ. 02 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட

மட்டக்களப்பு நாவலடி சுகாதார நிலையம் ஆளுநரினால் திறப்பு

by damith
December 5, 2023 9:53 am 0 comment

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு நாவலடி ஆரம்ப சுகாதார சேவைகள் நிலையம் நேற்று (04) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் மற்றும் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் இணைப்பு செயலாளர் பிரசாந்தன் உட்பட பலர் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நாவலடி ஆரம்ப சுகாதார சேவைகள் நிலையத்தின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி திருமதி தமிழ்வாணனின் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா வைபவங்களில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் செயலாளர் திருமதி எஸ் முரளிதரன் உட்பட பலரும் வருகை தந்திருந்தனர். சுனாமி தாக்கத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட நாவலடி பிரதேசத்தில் சுகாதார வைத்திய நிலையம் இன்மையால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மட்ட களப்பு வைத்தியசாலைக்கு சென்று தமது வைத்திய தேவைகளை நிறைவேற்றி வந்த நிலையில், ராஜாங்க அமைச்சர்களான சிவனேசத்துறை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழன் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான முயற்சியினால் இவ்வைத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு குறூப், புதிய காத்தான்குடி தினகன் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT