Friday, March 29, 2024
Home » சதுரங்க சுற்றுப்போட்டியில் கோணேஸ்வரா வெற்றி

சதுரங்க சுற்றுப்போட்டியில் கோணேஸ்வரா வெற்றி

by damith
December 5, 2023 11:48 am 0 comment

பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் பாடசாலைகளுக்கு இடையில் 7 பேர் கொண்ட குழுக்கள் முறையில் கந்தளாய் மத்திய கல்லூரியில் நடாத்தப்பட்ட சதுரங்க சுற்றுப் போட்டியில் மாகாண மட்டடத்தில் (03) தி/ இ.கி.ச கோணேஸ்வரா இந்துக்கல்லூரி வெற்றியீட்டியுள்ளது.

11 வயது மற்றும் 13 வயது மாணவர்கள் பங்குபற்றிய போட்டிகளில் 2 ஆம் இடத்தையும் 09 வயது மற்றும் 17 வயது மாணவர்கள் 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 15 வயது மாணவர்கள் கலந்து கொண்டு 5 ஆம் இடத்தையும் பெற்று அகில இலங்கை ரீதியாக நடைபெற உள்ள போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் குறித்த மாணவர்களை தெரிவு செய்து பயிற்சியளித்து போட்டிகளுக்கு ஒழுங்குபடுத்தி கால நேரம் பாராது அவர்களுடன் பாடுபட்டு அயராது உழைத்து வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற விளையாட்டுத்துறை ஆசிரியர் சுபைடீன் க்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT