தேமுதிக பொருளாளராக பிரேமலதா | தினகரன்

தேமுதிக பொருளாளராக பிரேமலதா

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

தேமுதிக ஆரம்பித்து 14 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் தேமுதிகவின் பொருளாளராக பிரேமலதா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேமுதிக மகளிரணித் தலைவியாக உள்ள பிரேமலதாவுக்கு கட்சியில் வேறு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாத நிலையில் தற்போது பொருளாளர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே தலைவர், பொதுச் செயலாளராக உள்ள விஜயகாந்த் தர்போது மீண்டும் கட்சியின் தலைவராகவும் நிரந்தரப் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். அவைத் தலைவராக இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளராக அழகாபுரம் மோகன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...